< Back
மாநில செய்திகள்
பஸ் நிழற்குடையில் ஆண் பிணம்
கரூர்
மாநில செய்திகள்

பஸ் நிழற்குடையில் ஆண் பிணம்

தினத்தந்தி
|
4 Aug 2023 11:36 PM IST

பஸ் நிழற்குடையில் ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நொய்யல் குறுக்குச் சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையின் உள்ளே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதையடுத்து வேட்டமங்கலம் (கிழக்கு) கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன், மயங்கி கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அவர் யார்? எந்த ஊரை சோ்ந்தவர்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்