மாலத்தீவு தீ விபத்து: தமிழர்கள் உள்பட 11 பேர் பலி - முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
|மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 இந்தியர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் நேற்று நள்ளிரவு அடுக்குமாடி கட்டடத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது, அருகில் உள்ள வீடுகளுக்கும் மளமளவெனப் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 11 பேரில் 3 பேர் தமிழர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் உயிர்சேதம் குறித்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க இந்திய தூதரகத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.