< Back
மாநில செய்திகள்
மலையம்மன் கோவில் தேரோட்டம்
கரூர்
மாநில செய்திகள்

மலையம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
12 May 2023 12:38 AM IST

தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கந்து கொண்டனர்.

தேரோட்டம்

கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற மலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 9-ந்தேதி இரவு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் மலையம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து அந்த தேர் தோட்டக்குறிச்சி, தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்றது. அப்போது அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் தேருக்கு முன்னால் கிடா வெட்டி, தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர். நேற்று மாலை தேர் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.

நேர்த்திக்கடன்

தொடர்ந்து மலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்