< Back
மாநில செய்திகள்
மலையாள பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்
கரூர்
மாநில செய்திகள்

மலையாள பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
27 April 2023 6:41 PM GMT

மலையாள பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

கிருஷ்ணராயபுரத்தில் பிரசித்தி பெற்ற மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 16-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 23-ந்தேதி கரகம் பாலித்தல், 24-ந்தேதி பால்குட ஊர்வலம், அம்மன் வீதி உலா, 25-ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் மலையாள பகவதி அம்மன் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் வைத்து மலையாள பகவதி அம்மனை வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கரகம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்