< Back
மாநில செய்திகள்
கமல்ஹாசனை வம்புக்கு இழுப்பதா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்
மாநில செய்திகள்

கமல்ஹாசனை வம்புக்கு இழுப்பதா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

தினத்தந்தி
|
18 Oct 2022 4:57 PM IST

முன்னாள் மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகத்துறை மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போரானாலும், விளையாட்டானாலும் தோல்வி என்பது அதில் ஒரு அங்கம் என்பதும், அது ஒருவரை முடக்கிவிடாது என்பதும் தேர்தலில் பலமுறை தோற்ற பொன்.ராதாகிருஷ்ணன் நன்கு அறிவார் என்று நம்புகிறோம்.

தன் கட்சிக்காரர்கள் யாரும் தன்னை கண்டுகொள்ளாத நிலையில், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேச வாய்ப்பு கிடைத்தவுடன், வாய்ப்பளித்தவர்களை புகழ்ந்து பேசும் முகத்தான் பொன்.ராதாகிருஷ்ணன் எங்கள் தலைவரை (கமல்ஹாசன்) வம்புக்கு இழுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

இனியும் பொன்.ராதாகிருஷ்ணன், எங்கள் தலைவரைப்பற்றி அவதூறு பேசாமல், இந்தியாவை பட்டினி தேசமாக மாற்றிவிடாமல், மக்களுக்காக பாடுபடும் அரசாக செயல்படும்படி நம் பிரதமரிடம் பேசும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்