< Back
மாநில செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்து, பெண்ணின் வீட்டை அபகரிக்க முயற்சி; ரவுடி உள்பட 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்து, பெண்ணின் வீட்டை அபகரிக்க முயற்சி; ரவுடி உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
24 May 2022 9:27 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கொலை மிரட்டல் விடுத்து, பெண்ணின் வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் கிழக்கு சாலையில் வசிப்பவர் வசந்தி (வயது 25). கடந்த 14-ந்தேதி வசந்தி வீட்டில் தனியாக இருந்தபோது, 2 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து மிரட்டினார்கள். வசந்தி வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாகவும், உடனடியாக வீட்டை காலி செய்துவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தொலைத்து கட்டிவிடுவோம் என்றும் அவர்கள் பயமுறுத்திவிட்டு சென்றனர். இது குறித்து வசந்தி சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் வசந்தியிடம் மிரட்டியவர்கள் மோகன் (57) மற்றும் அவரது மருமகன் தினேஷ் (37) என்று தெரிய வந்தது. மோகன் மீது கொலை உள்பட 20 வழக்குகள் உள்ளது. அவரது பெயர் ரவுடி பதிவேட்டில் உள்ளது. வசந்தியின் வீட்டை அபகரிக்கும் நோக்கில் கொலை மிரட்டல் விடுத்த மோகனும், தினேசும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்