தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க: ஓபிஎஸ்
|தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக செவிலியர்கள் தினத்தன்று தங்களுடைய ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள் தி.மு.க. அரசு செவிலியர்களுடைய வாழ்வில் ஒளியேற்றவில்லை.
மாறாக வலியேற்றிக் கொண்டிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும், மேற்படி 13,000 செவிலியர்களில் கிட்டத்தட்ட 10,000 செவிலியர்களின் பணி இன்னமும் நிரந்தரம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
செவிலியர்களின் கோரிக்கை என்பது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி மட்டுமல்ல, அரசு சார்பில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் உடனடியாக முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.