< Back
மாநில செய்திகள்
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு - அமைச்சர் சேகர் பாபு
மாநில செய்திகள்

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு - அமைச்சர் சேகர் பாபு

தினத்தந்தி
|
10 Dec 2022 5:16 AM GMT

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

சென்னை,

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இன்றும், நாளையும் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். இது தொடர்பாக கூறியதாவது,

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்பக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. 400க்கும் மேற்பட்ட மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

மேலும், வடசென்னையை பொறுத்தவரை மிக குறைந்த அளவிலான மக்களே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தான் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்