< Back
மாநில செய்திகள்
வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
கரூர்
மாநில செய்திகள்

வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு

தினத்தந்தி
|
12 March 2023 6:35 PM GMT

வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது.இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது.

மேலும் செய்திகள்