< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
|8 Oct 2022 12:10 AM IST
வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வரத்து குறைவால் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.18-க்கு விற்ற மக்காச்சோளம் தற்போது ரூ.20-க்கு விற்பனையாகிறது.