< Back
மாநில செய்திகள்
மான், பன்றிகளால் மக்காச்சோள   பயிர்கள் சேதம்:  விவசாயிகளுக்கு கடம்பூர் ராஜூ ஆறுதல்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மான், பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு கடம்பூர் ராஜூ ஆறுதல்

தினத்தந்தி
|
15 Dec 2022 6:45 PM GMT

சவலாப்பேரியில் மான், பன்றிகளால் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

கயத்தாறு:

சவலாப்பேரியில் மான், பன்றிகளால் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

பயிர்கள் சேதம்

கயத்தாறு தாலுகா சவலாப்பேரி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மானாவாரி பயிராக மக்காச்சோளம் மற்றும் உளுந்தம் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த பயிர்களில் கதிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டுப் பன்றிகளும், மான்களும் இரவு நேரங்களில் கும்பல் கும்பலாக வந்து இந்த பயிர்களை சேதப்படுத்தி சென்று விட்டன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், உளுந்தம் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சவலாப்பேரி கிராமத்தில் பயிர்கள் சேதமடைந்்த நிலங்களை பார்வையிட்டார்.

விவசாயிகளுக்கு ஆறுதல்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், இங்கு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க கலெக்டரிடம் முறையிட உள்ளேன். மேலும் அடுத்த சட்டமன்ற கூட்டத்திலும் விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகை வழங்க கோரியும், இந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்த உள்ளேன், என்றார்.

அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், விவசாய சங்கத்தினர், விவசாயிகள் உடனிருந்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பஞ்சாயத்து மீனாட்சிநகர் 6-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.69 லட்சம் செலவில் புதிதாக வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்