< Back
மாநில செய்திகள்
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்: ரெயில் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்: ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
2 Aug 2024 9:08 PM IST

மங்களூரு-கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை, திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்களில் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு;

* ஆகஸ்ட் 5,6,8,9,11 ஆகிய தேதிகளில் மதுரை-ராமநாதபுரம் இடையே 12.30 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் ரத்துசெய்யப்படுகிறது.

* ராமநாதபுரம்-மதுரை இடையே காலை 11 மணிக்கு செல்லும் பாசஞ்சர் ரெயில் ஆகஸ்ட் 5,6,8,9,11 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

* மங்களூரு-கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 5,8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

* கன்னியாகுமரி-மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில், ஆகஸ்ட் 6,9 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.

*இரவு 11.25 மணிக்கு புறப்படும் மதுரை-புனலூர் ரெயில், ஆகஸ்ட் 5,8 ஆகிய தேதிகளில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 6, 9 ல் புனலூர்-மதுரை ரெயில் மாலை 5.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

* குருவாயூர்-எழும்பூர், மயிலாடுதுறை-செங்கோட்டை, திருச்சி-காரைக்குடி ரெயில்களில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்