< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: திருத்தணி - அரக்கோணம் மின்சார ரெயில் ரத்து
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: திருத்தணி - அரக்கோணம் மின்சார ரெயில் ரத்து

தினத்தந்தி
|
3 July 2024 9:40 PM IST

பராமரிப்பு பணிக்காரணமாக திருத்தணி - அரக்கோணம் இடையே மின்சார ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலை பாதுகாப்பாக இயக்க ஒவ்வொரு வழித்தடத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியது மிகமுக்கியமானது ஆகும். அந்தவகையில், அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் வரும் 4-ந்தேதி இரவு 10 மணி முதல் 5-ந்தேதி காலை 6 மணி வரையும் மற்றும் 6-ந்தேதி இரவு 10 மணி முதல் 7-ந்தேதி காலை 6 மணி வரையும் பராமரிப்பு பணி நடைபெறுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருத்தணியிலிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மூர் மார்க்கெட்டில் இருந்து வரும் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்