< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி : ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் நாளை ரத்து
சேலம்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி : ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் நாளை ரத்து

தினத்தந்தி
|
2 July 2023 2:07 AM IST

பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு- ஜோலார்பேட்டை ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

சூரமங்கலம்:

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே ஈரோடு- ஜோலார்பேட்டை (06412) மற்றும் ஜோலார்பேட்டை- ஈரோடு (06411) ஆகிய ரெயில்கள் நாளை (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்