< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி எதிரொலி: இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி எதிரொலி: இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து

தினத்தந்தி
|
3 March 2024 6:42 AM IST

மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளது

பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் செய்திகள்