< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: கடற்கரை-தாம்பரம் நள்ளிரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: கடற்கரை-தாம்பரம் நள்ளிரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து

தினத்தந்தி
|
12 March 2024 10:22 PM IST

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40419) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

சென்னை,

சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே 13-ந்தேதி (நாளை) முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40150) நாளை முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40419) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40420) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்