< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
12 July 2024 2:27 PM GMT

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை,

கோவை பீளமேடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வரும் 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் கோவை வழியாக இயங்காமல் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால் பீளமேடு, கோவை வடக்கு மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நிற்காது. வரும் 14-ந்தேதி கோவை வழியாக இயக்கப்பட வேண்டிய பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரெயில் கோவையில் நிற்காமல் போத்தனூரில் நிற்கும்.

திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் வரும் 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் கோவை வழியாக இயங்காமல் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால் கோவையில் நிற்காமல் போத்தனூரில் நிற்கும். வரும் 14-ந்தேதி கோவை வழியாக இயக்கப்படும் சில்சார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால் கோவையில் நிற்காமல் போத்தனூரில் நிற்கும்.

புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் வரும் 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் கோவை வழியாக இயங்காமல் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால் கோவையில் நிற்காமல் போத்தனூரில் நிற்கும். பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வரும் 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் கோவை வழியாக இயங்காமல் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால் கோவையில் நிற்காமல் போத்தனூரில் நிற்கும்.

ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் வரும் 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் கோவை வழியாக இயங்காமல் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால் கோவையில் நிற்காமல் போத்தனூரில் நிற்கும். எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வரும் 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் கோவை வழியாக இயங்காமல் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால் கோவையில் நிற்காமல் போத்தனூரில் நிற்கும்.

வரும் 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் ஈரோடு-கோவை ரெயில், ஈரோட்டில் இருந்து தினமும் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு இருகூரில் நிறுத்தப்படும். இருகூரில் இருந்து கோவைக்கு ரெயில் இயக்கப்படாது. கோவை-சோரனூர் ரெயில் கோவையிலிருந்து தினமும் காலை 11.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக போத்தனூரில் இருந்து 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் மதியம் 12.05 மணிக்கு புறப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி ஜி.மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்