< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: சேலம் - மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: சேலம் - மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்

தினத்தந்தி
|
23 Jun 2024 6:41 AM IST

சேலம் - மயிலாடுதுறை ரெயில் நாளை கரூர் வரை மட்டுமே இயக்கப்படுமென ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம்,

திருச்சி கோட்டம் குளித்தலை- பேட்டைவாயத்தலை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது, இதையொட்டி சேலம்- மயிலாடுதுறை வழித்தடத்தில் 24, 27-ந் தேதிகளில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது சேலம் - மயிலாடுதுறை ரெயில் (16812) நாளை சேலத்தில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் நாளை கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். மேலும் சேலம்- மயிலாடுதுறை ரெயில் (16812) வருகிற 27-ந் தேதி சேலத்தில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

27-ந் தேதி அன்று கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்