< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: மைசூரு-சென்னை ரெயில் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: மைசூரு-சென்னை ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
30 Aug 2024 2:10 AM GMT

பராமாிப்பு பணி காரணமாக மைசூரு-சென்னை ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

* மைசூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12610) வருகிற 1-ந்தேதி காட்பாடி-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) வருகிற 1-ந்தேதி எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்படும்.

இதேபோல், ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

* கொச்சுவேலி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06083) வருகிற 3-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை (செவ்வாய்க்கிழமைகளில் மட்டும்) கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூருவுக்கு வரும்.

* எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06084) வருகிற 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை (புதன்கிழமைகளில் மட்டும்) பெங்களூருவில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் கொல்லம், காயன்குளம், மாவலிகரா, செங்கனூர், திருவள்ளா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆல்வா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, கே.ஆர்.புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்