< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி: திருத்தணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி: திருத்தணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து

தினத்தந்தி
|
7 Sept 2023 6:23 PM IST

திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி காரணமாக திருத்தணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக அரக்கோணம், திருத்தணிக்கு புறநகர் மின்சார ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வந்தன. தற்போது திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருத்தணிக்கு செல்லும் பெரும்பாலன மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் காலை முதல் பிற்பகல் 4 மணி வரை ஒரே ஒரு மின்சார ரெயில் மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்