சென்னை
சென்டிரல்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே இன்று நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 9 மணி, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-ஆவடி இரவு 11.30 மணி, 11.45 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரை-அரக்கோணம் இடையே அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை (திங்கட்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-கடற்கரை இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று ஆவடி-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த மின்சார ரெயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.
* அரக்கோணம்-சென்டிரல் இடையே இரவு 9.50 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-சென்டிரல் இடையே இரவு 10.45 மணி, திருத்தணி-சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று ஆவடி-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த மின்சார ரெயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.
* அரக்கோணம்-வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை அரக்கோணம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.