< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: 11 மின்சார ரெயில்கள் சேவை ரத்து
சென்னை
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: 11 மின்சார ரெயில்கள் சேவை ரத்து

தினத்தந்தி
|
6 Sept 2023 10:48 AM IST

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல் மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுவதால், இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 11 மின்சார ரெயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக பயணிகள் சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று, காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரல் - கடம்பத்தூர், காலை 9.10 மணிக்கு சென்னை சென்டிரல் - திருவள்ளூர், காலை 10 மணிக்கு சென்னை சென்டிரல் - திருவள்ளூர், காலை 10.25 மணிக்கு கடம்பத்தூர் - சென்னை சென்டிரல், காலை 11 மணிக்கு சென்னை சென்டிரல் - கடம்பத்தூர், காலை 11.10 மணிக்கு திருவள்ளூர் - சென்னை சென்டிரல், காலை 11.35 மணிக்கு கடம்பத்தூர் - சென்னை சென்டிரல், மதியம் 12.35 மணிக்கு திருவள்ளூர் - சென்னை சென்டிரல், மதியம் 1.25 மணிக்கு கடம்பத்தூர் - சென்னை சென்டிரல் ஆகிய நிலையங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் ஆவடி வழித்தடத்தில் தண்டவாள பணி மேற்கொள்வதால் இன்று இரவு 11.45 மணிக்கு சென்னை சென்டிரல் - ஆவடி செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து ஆவடிக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல இன்று மற்றும் செப்டம்பர் 7, 8-ந்தேதிகளில் நள்ளிரவு 12.15 சென்னை சென்டிரல் - ஆவடி செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்