< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
'மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு' - துரை வைகோ

7 Sept 2024 11:24 PM IST
பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது சனாதன சொற்பொழிவு என துரை வைகோ விமர்சித்துள்ளார்.
திருச்சி,
மகாவிஷ்ணுவை பள்ளியில் பேசுவதற்கு அழைத்து வந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல, அது சனாதன சொற்பொழிவு. ஆன்மிகம் என்பது வேறு, சனாதனம் என்பது வேறு. மகாவிஷ்ணு உண்மையான இந்து கிடையாது. இந்து மதத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்பவர். அவரை பள்ளியில் பேசுவதற்கு அழைத்து வந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.