< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மகாவீர் ஜெயந்தி; ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
|21 April 2024 11:44 AM IST
சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டி வாழ வேண்டும் என்கிற அற நெறியைப் பரப்பிய பகவான் மகாவீரர் பிறந்த நாளைக் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இனிய நாளில், அமைதிக்கு வழி வகுக்கும் பகவான் மகாவீரர் அவர்களின் போதனைகளை மனதில் நிலைநிறுத்தி, அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கையை நாம் அனைவரும் மேற்கொள்ள உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.