< Back
மாநில செய்திகள்
மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தினத்தந்தி
|
31 Jan 2023 12:42 AM IST

மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாள் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்து மாணவ-மாணவிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்