< Back
மாநில செய்திகள்
மகாத்மாகாந்தி பிறந்தநாள் விழா
திருவாரூர்
மாநில செய்திகள்

மகாத்மாகாந்தி பிறந்தநாள் விழா

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

நீடாமங்கலத்தில் மகாத்மாகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்தமேரி முன்னிலை வகித்தார். விழாவில் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது தூய்மை பணியாளர்கள், டெங்கு பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திகார்த்தி, திருப்பதி மற்றும் சங்கவி, கார்த்திகாதேவி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை திடக்கழிவு மேலாண்மை பயிற்சியாளர் விஜய் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்