< Back
மாநில செய்திகள்
சீர்காழி, திருவெண்காடு பகுதியில் உள்ள சிவாலயங்களில்  மகாசிவராத்திரி விழா
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சீர்காழி, திருவெண்காடு பகுதியில் உள்ள சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா

தினத்தந்தி
|
20 Feb 2023 12:15 AM IST

சீர்காழி, திருவெண்காடு பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று முன்தினம் மகாசிவராத்திரி விழா நடந்தது.

சீர்காழி, திருவெண்காடு பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று முன்தினம் மகாசிவராத்திரி விழா நடந்தது. இதில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர். திருவெண்காடு அருகே கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நவக்கிரகங்களில் கேது பகவானுக்குரிய கோவிலான நாகநாதசாமி கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் நாகநாதசாமியும், சவுந்தரநாயகி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் மற்றும் தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்