< Back
மாநில செய்திகள்
மண்டைக்காடு கோவிலில்  திருவிதாங்கூர் மகாராணி தங்கரதம் இழுத்தார்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மண்டைக்காடு கோவிலில் திருவிதாங்கூர் மகாராணி தங்கரதம் இழுத்தார்

தினத்தந்தி
|
11 March 2023 1:59 AM IST

மண்டைக்காடு கோவிலில் திருவிதாங்கூர் மகாராணி தங்கரதம் இழுத்தார்

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா நடந்து வருகிறது. 6-வது நாளான நேற்று நடந்த வலியபடுக்கை பூஜையில் பங்கேற்கவும், ஹைந்தவ சேவா சங்க சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் திருவிதாங்கூர் மகாராணி அஸ்வதித் திருநாள் கவுரி லட்சுமிபாய் மண்டைக்காடு வந்தார். அவருக்கு மண்டைக்காடு என்.எஸ்.எஸ். சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தார். பின்னர் வெளியே வந்த அவர் அம்மன் தங்கரதத்தில் உலாவிற்காக எழுந்தருளல் நடந்தது. அதைத்தொடர்ந்து அவர் தங்க ரதத்தை இழுத்து கோவிலை வலம் வந்தார். அவருடன் கோவில் தந்திரி சங்கர நாராயணன், அகில பாரத தந்திரி பரிஷத் சேர்மன் ஸ்ரீராஜ் கிருஷ்ணன் போற்றி, தலைவர் ராஜேஷ் போற்றி, அகில பாரத இந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், என்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்