சிவகங்கை
மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
|போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
சிங்கம்புணரி அரளிப்பட்டி விலக்கு அருகே மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவ-மாணவிகள், சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையுடன் இணைந்து போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் காசிராஜன், பொருளாளர் ஹபிபுல்லா ஆகியோரின் உத்தரவுக்கிணங்க கல்லூரி முதல்வர் பிரேம்நாத், துணை முதல்வர் ஸ்ரீதர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலம் எஸ்.வி.மங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து அரளிப்பட்டி மகாராஜா பாலிடெக்னிக் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்றனர்.