< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மகாளய அமாவாசை, நவராத்திரி விழா: சதுரகிரியில் இன்று முதல் தரிசன அனுமதி
|23 Sept 2022 12:45 AM IST
மகாளய அமாவாசை, நவராத்திரி விழாவையொட்டி, சதுரகிரியில் இன்று முதல் 13 நாட்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் புரட்டாசி பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வருகிற 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் அதற்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் 13 நாட்களுக்கு நாள்தோறும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சதுரகிரியில் சாமி தரிசனம் செய்யலாம்.