< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலம்
|18 Feb 2023 10:40 PM IST
கபாலீஸ்வரர் கோவிலில், ‘மயிலையில் சிவராத்திரி’ என்ற பெயரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சென்னை,
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவிலில், 'மயிலையில் சிவராத்திரி' என்ற பெயரில் இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று மாலை 6 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி, நாளை காலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக வண்ண ஒளி விளக்கு அலங்காரங்களுடன் கூடிய பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு, ஆன்மிகம் சார்ந்த கலை நிக்ழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு நிகழ்ச்சியினைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.