< Back
மாநில செய்திகள்
மகா சிவராத்திரி விழா: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி
மாநில செய்திகள்

மகா சிவராத்திரி விழா: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

தினத்தந்தி
|
18 Feb 2023 6:08 AM IST

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

காய்ச்சல் சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது. அதேபோல், காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.

மகா சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பகலில் 4 கால பூஜைகளும், இரவில் 4 கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்ற உள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்