தஞ்சாவூர்
மகா கணபதி கோவில் தேரோட்டம்
|கணபதி அக்ரகாரம் மகா கணபதி கோவில் தேேராட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
கணபதி அக்ரகாரம் மகா கணபதி கோவில் தேேராட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
மகா கணபதி கோவில்
அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரகாரம் கிராமத்தில் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவ விழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா கணபதி எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
கண்ணாடி பல்லக்கு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை சாமிக்கு மகா அபிஷேகமும், தீர்த்தவாரியும், தீபாராதனையும் நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை கண்ணாடி பல்லக்கில் சாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.