< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோவிலில் மகா தீபம்
|8 Dec 2022 12:29 AM IST
வைத்தியநாத சுவாமி கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுந்ராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று கோவிலின் முன்புமகா தீபம் ஏற்றப்பட்டு கொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனையடுத்து முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் வைத்தியநாதன் உடனாய சுந்ராம்பிகை, பாலம்பிகை ஆகிய தெய்வங்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வீதிஉலா வந்தன. இதேபோல் திருமானூர் கைலாசநாதர் கோவில், கீழப்பழுவூர் ஆலந்துறையார் சிவன் கோவில் மற்றும் திருமானூர் ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராமங்களில் உள்ள முருகன், விநாயகர் மற்றும் அம்மன் கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.