< Back
மாநில செய்திகள்
மதுரை மண்டல நீர்வளத்துறை ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு
மாநில செய்திகள்

மதுரை மண்டல நீர்வளத்துறை ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

தினத்தந்தி
|
2 Sept 2022 12:39 AM IST

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன், கேட்டறிந்தார்.

நெல்லை,

மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல நீர்வளத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன், கேட்டறிந்தார்.

மேலும் அந்த பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவுகளை பிறப்பித்தார். அதனை தொடர்ந்து 2-ந்தேதி(இன்று) காலை நெல்லை தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டங்களை அமைச்சர் துரைமுருகன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும் செய்திகள்