< Back
மாநில செய்திகள்
மதுரை ரெயில் தீ விபத்து; 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது - டிடிவி தினகரன்
மாநில செய்திகள்

மதுரை ரெயில் தீ விபத்து; 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது - டிடிவி தினகரன்

தினத்தந்தி
|
26 Aug 2023 3:53 PM IST

மதுரை அருகே சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

மதுரை அருகே சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரெயில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

உத்தரப்பிரதேசத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள மதுரை வந்திருந்த பயணிகளின் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ரெயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில் விதிமுறைகளை மீறி சிலிண்டர் எடுத்துச் சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இனி வரும் காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெயில்வே துறை உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்