மதுரை
மதுரை மாணவர் தேசிய ஜூடோ போட்டிக்கு தேர்வு
|மதுரை மாணவர் தேசிய ஜூடோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 29 மற்றும் 30-ந் தேதிகளில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய அளவிலான ஜூடோ வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே, மதுரை புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கிஷோர் குமார் (17 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான) 50 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் வருகிற டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய ஜூடோ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சேக் நபி, உடற்கல்வி ஆசிரியர் மன்சூர், ஜூடோ பயிற்சியாளர் அஜய் ஆகியோர் பாராட்டினர். அப்போது உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாகீர் உசேன், ரகுமத்துல்லா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.