< Back
மாநில செய்திகள்
மதுரை பள்ளி அணிகள் சாம்பியன்
மதுரை
மாநில செய்திகள்

மதுரை பள்ளி அணிகள் சாம்பியன்

தினத்தந்தி
|
17 Aug 2022 8:03 PM GMT

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் மதுரை பள்ளி அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

வாடிப்பட்டி,

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் மதுரை பள்ளி அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

ஆக்கி போட்டி

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் மதுரை அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சுதந்திரதினம், போதை ஒழிப்பு, பாலியல் விழிப்புணர்வு தினத்தையொட்டி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 3 நாட்களாக நடந்தது. இந்த போட்டியில் முதல் நாள் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அணியும், 2-ம் நாள் மாணவிகள் அணியும் விளையாடின.

. இந்த போட்டிகள் நாக்அவுட் முறையில் நடந்தது. முதல் அரையிறுதி போட்டியில் திருநகர் இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி 2-1 என்ற கணக்கில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை வென்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மதுரை புனித பிரிட்டோ பள்ளி அணியை வென்றது. இதன் இறுதிப் போட்டியில் திருநகர் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி அணி 3-1 கோல்கணக்கில் பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

மாணவிகள் பிரிவு

2-ம் நாள் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் நாக் அவுட்முறையில் விளையாடினர். முதல் அரையிறுதி போட்டியில் மாங்குளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியும், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் வாடிப்பட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2-வது அரையிறுதியில் செவன்த்டே அணியும், திருமங்கலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் செவன்த்டே அணி 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இறுதி போட்டியில் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் மதுரை செவன்த்டே மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. இதில் செவன்த்டே அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

பரிசளிப்பு விழா

இதன் பரிசளிப்பு விழாவிற்கு தலைமை ஆசிரியர் இலக்குமணன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அமுதஸ்ரீ முன்னிலை வகித்தார். ஆசிரியர் வெங்கடம்மாள் வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி பரிசுகள் வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்