< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை: கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் உயிரிழப்பு
|17 May 2024 7:56 AM IST
இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
மதுரை,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் மதிச்சியம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதில் பாலசுப்பிரமணியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.