< Back
மாநில செய்திகள்
மதுரை:  செல்போனுக்காக வடமாநில தொழிலாளி படுகொலை; மர்ம நபர்கள் அட்டகாசம்
மாநில செய்திகள்

மதுரை: செல்போனுக்காக வடமாநில தொழிலாளி படுகொலை; மர்ம நபர்கள் அட்டகாசம்

தினத்தந்தி
|
29 Nov 2023 9:11 AM IST

இந்த சம்பவம் பற்றி ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோப்பூர்,

மதுரையில் திருமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட மருத்துவமனை ஒன்றில் வடமாநில தொழிலாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் கட்டிட வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தோப்பூர் பகுதியில் பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் 2 பேர் சாலையோரம் நடந்து சென்றனர்.

அவர்கள் உணவு சமைக்க தேவையான பொருட்களை வாங்கி விட்டு தங்கியிருந்த பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர்.

அவர்கள் கட்டிட தொழிலாளிகளிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அவர்களை வடமாநில தொழிலாளிகள் துரத்தி சென்று, பிடித்தனர்.

செல்போன் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் கத்தியால், குத்தி தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயமடைந்த இருவரையும் அருகே இருந்தவர்கள் மீட்டனர்.

இதன்பின்னர், அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், தொழிலாளிகளில் ஒருவர் உயிரிழந்து விட்டார். மற்றவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்