< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சனாதானம் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து பதிவு
|5 Sept 2023 12:34 AM IST
சனாதானம் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து பதிவுசெய்துள்ளார்.
சென்னை,
சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சனாதானம் தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;
"சனாதனத்தை ஆதரித்து ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்திலும், ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர்கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம்.
ஆனால் சனாதனத்தை எதிர்த்துப் பேசினால் நேர்மைக்கு வேலையில்லை. "கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்" என்ற சல்லித்தனமே அரங்கேறும். அதுதான் சனாதனம். " இவ்வாறு அவர் கூறியுள்ளார்.