< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை இன்று மூடல்..!
|8 April 2023 8:40 AM IST
திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடப்பட்டது.
மதுரை,
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக சொக்கநாதர் – மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண விழா இன்று (ஏப்.08) நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடப்பட்டது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் எழுந்தருளுவதையொட்டி நடை மூடப்பட்டது.
காலை 5 மணிக்கு மூடப்பட்ட நடை இரவு 11 மணிவரை அடைக்கப்பட்டிருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.