< Back
மாநில செய்திகள்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு நீச்சல் குளம்: அமைச்சர் திறந்துவைத்தார்
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு நீச்சல் குளம்: அமைச்சர் திறந்துவைத்தார்

தினத்தந்தி
|
16 April 2023 2:25 PM IST

யானைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட குளியல் தொட்டியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பிரம்மாண்ட குளியல் தொட்டியில் உற்சாகமாக குளியலாடி மகிழ்ந்தது. கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கோயில் யானை பார்வதி, சிகிச்சைக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

மன அழுத்தத்தைக் குறைக்க 23.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட குளியல் தொட்டி அமைக்கப்பட்ட நிலையில், அதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பிரம்மாண்ட தொட்டியில் இறங்கிய பார்வதி யானை தண்ணீரைக் கண்டதும் உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி மகிழ்ந்து ஆனந்தக் குளியல் போட்டது அனைவரையும் ரசிக்க வைத்தது.



மேலும் செய்திகள்