< Back
மாநில செய்திகள்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 அறங்காவலர்கள் நியமனம்
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 அறங்காவலர்கள் நியமனம்

தினத்தந்தி
|
8 Nov 2023 9:13 PM IST

அறங்காவலர்கள் 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனை செய்து வந்தது. இந்த நிலையில் 5 பேரை புதிய அறங்காவலர்களாக நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி, சுப்புலட்சுமி, பி.கே.எம்.செல்லையா, சீனிவாசன், மீனா ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர், மகளிர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் அறங்காவலர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு உறுப்பினர்கள் 30 நாட்களுக்குள் அறங்காவலர் குழு தலைவரை தேர்வு செய்வார்கள் என்றும், அறங்காவலர்கள் 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்