< Back
மாநில செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டு சேலைகள் ரூ.5.45 கோடிக்கு ஏலம்-தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
மாவட்ட செய்திகள்
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டு சேலைகள் ரூ.5.45 கோடிக்கு ஏலம்-தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

தினத்தந்தி
|
14 April 2023 8:54 PM GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டு சேலைகள் ரூ.5.45 கோடிக்கு ஏலம்-தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் தினமும் பக்தர்கள் சார்பாகவும், கோவில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலைகள், வஸ்திரங்கள் சாத்தப்படுவது வழக்கம். அவ்வாறு சாத்தப்படுபவை வாரம் ஒரு முறை கோவில் வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு, கோவில் நிர்வாகம் தகவல்கொடுத்துள்ளது. அதில், கடந்த 2020 முதல் 2022 -ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் 5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 ரூபாய்க்கு, கோவிலில் இருந்து பட்டுசேலை உள்ளிட்டவை பக்தர்களிடம் ஏலம் விடப்பட்டு, அந்த தொகை கிடைத்து இருக்கிறது. இத்தொகை கோவிலின் வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்