< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் பனிப்பொழிவால் மதுரை மல்லிகைப்பூ வரத்து குறைவு; கிலோ ரூ.2,000-க்கு விற்பனை
|8 Feb 2024 9:08 PM IST
விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
மதுரை,
தொடர் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், மல்லிகைப்பூ கிலோ 2,000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ 1,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கனகாம்பரம் கிலோ 1,000 ரூபாய்க்கும், அரளிப்பூ 200 ரூபாய்க்கும், பட்டன்ரோஸ் 120 ரூபாய்க்கும், செவ்வந்தி 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில வாரங்களுக்கு பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.