< Back
மாநில செய்திகள்
வரத்து அதிகரிப்பால் மதுரை மல்லிகை விலை தொடர் சரிவு-ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை
மதுரை
மாநில செய்திகள்

வரத்து அதிகரிப்பால் மதுரை மல்லிகை விலை தொடர் சரிவு-ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை

தினத்தந்தி
|
25 May 2023 1:49 AM IST

வரத்து அதிகரிப்பால் மதுரை மல்லிகை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 1 கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வரத்து அதிகரிப்பால் மதுரை மல்லிகை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 1 கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மல்லிகை பூக்கள்

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக டன் கணக்கில் கொண்டுவரப்படுகிறது. தற்போது, வெயில் காலம் என்பதால் மல்லிகைப்பூவின் வரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்களின் விலை தொடர்ந்து சரிந்துள்ளது.

அதன்படி, நேற்று மதுரை மாட்டுத்தாவணி மார்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.300-க்கு விற்பனையானது. இதுபோல், முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.600, பட்டன்ரோஸ் ரூ.200, சம்பங்கி ரூ.50, செண்டுமல்லி ரூ.50 என விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் குறைவாகவே இருந்தது.

தினமும் 20 டன்

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு 10 டன் அளவுள்ள பூக்கள் வரும். ஆனால், தற்போது சீசன் என்பதால் மதுரை மாவட்டத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தினமும் 20 டன் வரை மல்லிகைப்பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

விற்பனைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும், செண்ட் பேக்டரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களுக்கு இந்த விலை தான் தொடரும்" என்றனர்.

மேலும் செய்திகள்