< Back
மாநில செய்திகள்
பாழடைந்த நூலக கட்டடங்களை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

பாழடைந்த நூலக கட்டடங்களை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

தினத்தந்தி
|
28 Feb 2023 11:02 PM IST

தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் பாழடைந்துள்ள நூலக கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சேதுமடைந்த உள்ள நிலையில் இருக்கும் கட்டிடத்தை பிடித்து புதிய நூலக கட்டிட அமைக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் பாழடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அகற்றும் பணி 2 வாரத்தில் முடியும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் பாழடைந்துள்ள நூலக கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய நூலக கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்