மதுரை
டெல்லியை சேர்ந்த இளம்பெண் கும்பகோணத்தில் பலாத்காரம்: 4 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உறுதி மேல்முறையீட்டு வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
|டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் கும்பகோணத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேருக்கு தஞ்சாவூர் கோர்ட்டு விதித்த வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் கும்பகோணத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேருக்கு தஞ்சாவூர் கோர்ட்டு விதித்த வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இளம்பெண் பலாத்காரம்
டெல்லியை சேர்ந்த 27 வயதான இளம்பெண்ணுக்கு கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக அவர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி ரெயில் மூலம் வந்தார். அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு இரவு 11 மணி அளவில் வந்த அந்த இளம்பெண், ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ டிரைவர் அவரை குறிப்பிட்ட விடுதிக்கு அழைத்துச்செல்லாமல் புறவழிச்சாலை பகுதிக்கு அழைத்துச்சென்றார்.
இதனால் பயந்து போன அந்த பெண் ஆட்டோவில் இருந்து தனது உடைமைகளுடன் கீழே குதித்தார். ஆட்டோ டிரைவர் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பகோணத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 26), வசந்தகுமார் (23), புருஷோத்தமன் (21), அன்பரசன் (21) ஆகியோர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
வாழ்நாள் முழுவதும் சிறை
இதுகுறித்த புகாரின்பேரில் கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரையும், ஆட்டோ டிரைவர் குருமூர்த்தியையும் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட மகளிர் கோர்ட்டு, தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய 4 பேரும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தது. அபராத தொகையில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் தஞ்சை மகளிர் கோர்ட்டு பரிந்துரைத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 5 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, இந்த வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
டெல்லியை சேர்ந்த இளம்பெண் கும்பகோணத்தில் பலாத்காரம்:
விசாரணை முடிவில், மேற்கண்ட 4 பேருக்கு தஞ்சாவூர் மாவட்ட மகளிர் கோர்ட்டு விதித்த வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது. ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனை 3 ஆண்டாக குறைக்கப்படுகிறது. மற்றவர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.