< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு - தஞ்சை கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
|27 April 2023 4:41 PM IST
சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஏரிப்புறக்கரை பகுதியில் உள்ள ஏரிகளில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், இதனை தடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.